கொண்டையானிருப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கொரடாச்சேரி வட்டாரத்துக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளிக்குச் செல்லா சிறுவர்களை கண்டறியும் பணி நடைபெற்றது. அப்போது, வெளி மாவட்டங்களிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியத்தில் தங்கியிருக்கும் பள்ளிக்குச் செல்லா சிறுவர்கள் 23 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி மைய தொடக்க விழா கொண்டையானிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் கலைவாணன், வட்டாரக் கல்வி அலுவலர் கிருபா, வட்டார வள மேற்பார்வையாளர் பிரபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment