மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின்சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை.
மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும்.
மாறாக ஸ்கூட்டர் சக்கரங்கள் சிறியவை; எனவே முழுமையான திண்ம நிலையிலும் அவற்றின் எடை மிகுதியாவதில்லை. அதே நேரத்தில் கம்பிகளுடன் கூடிய சக்கரங்கள் விபத்து அல்லது வேறு காரணங்களால் எளிதில் தமது சீரான வட்ட வடிவத்தை இழந்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே எடை மிகுதி என்ற ஒரு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் கம்பிகளின்றி ஒரே திண்மத் தன்மையுடன் கூடிய சக்கரங்களைப் பயன் படுத்துவது சிறந்தது எனலாம். தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.
0 comments:
Post a Comment