TETஆன்லைன் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பவானி ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், எஸ்எம்எஸ்., மூலம் அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க பயோமெட்ரிக் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதேபோல் ஸ்மார்ட் கார்டு திட்டம், மாணவர்களின் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் க்யூஆர்., கோடு மூலம் எந்த பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள், எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், 672 பள்ளிகளில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 'அடல்' அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குளறுபடிகளை களைந்து, இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்படும். இனி ஆன்லைன் மூலம் தகுதி தேர்வு நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

0 comments:

Post a Comment