கோவை மாவட்டத்தில்
கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த, 16 ஆயிரத்து 718 மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' விரைவில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் ஆண்டுதோறும் வினியோகிக்கப்படுகிறது
கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதி, கல்லுாரி சென்ற மாணவர்களுக்கு, தற்போது லேப்டாப் வினியோகிக்கப்படுகிறது
இதன்படி, கோவை மாவட்டத்தில், 16 ஆயிரத்து 718 மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை, விரைவில் மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் சேர்ந்துள்ளதால், முறையாக தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி பெற்றுக்கொள்ள, இருவார அவகாசம் அளிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment