குழந்தைகள் தினம், பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், நாளை 

குழந்தைகள் தின விழா கொண்டாட, பள்ளி கல்வித்துறை 
உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால்
 நேருவின் பிறந்த நாளான, நவம்பர், 14, குழந்தைகள் தினமாக, 
நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 
தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், நாளை 
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், 
ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தைகளை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள், 
போட்டிகள் நடத்த, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் 
வழியே, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 
சென்னையில், எம்.சி.சி., பள்ளியில் குழந்தைகள் தின 
விழா நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வி அமைச்சர், 
செங்கோட்டையன் பங்கேற்கிறார்.

Related Posts:

0 comments:

Post a Comment