அரசு துறைகளில், 1,199 இடங்களுக்கான'குரூப் - 2' முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இதில் 4.65 லட்சம் பேர் பங்கேற்றனர்.குரூப் - 2 பதவியில், 1,199 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.கூட்டுறவு பதிவு துறையில், மூத்த இன்ஸ்பெக்டர் பதவியில், 599; வேளாண் துறையில், கண்காணிப்பாளர், 118; உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இரண்டாம் நிலை சார் பதிவாளர், 73; தொழிற்துறை கண்காணிப்பாளர், 39; பால் வளத்துறையில், மூத்த இன்ஸ்பெக்டர், 48 இடங்கள் உள்பட, 1,199 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த தேர்வுக்கு, 3.54 லட்சம் பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தினர் உட்பட, 6.26 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும், நேற்று, முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 4.65 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், 56 சதவீதம் பேர் பெண்கள்.தேர்வுக்காக, மாநிலம் முழுவதும், 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில், 247 மையங்களில், 64 ஆயிரத்து, 309 பேர் தேர்வில் பங்கேற்றனர்.மொத்தம், 254 பறக்கும் படைகளும், 2,268 வீடியோ கண்காணிப்பு படைகளும் அமைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment