வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் வானிலை ஆய்வாளர்கள் தகவல்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை 7 புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், தமிழகத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழறசி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராமபட்டினத்தில் 41.4 மி.மீ, காரைக்கால் 111 மி.மீ, நாகையில் 166 மி.மீ, பாம்பனில் 154 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 53 மி.மீ, தஞ்சாவூரில் 70 மி.மீ, திருச்சியில் 27 மி.மீ, வால்பாறையில் 26 மி.மீ, வேலூரில் 16 மி.மீ, நாமக்கல்லில் 16 மி.மீ, குன்னூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 29ம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment