தமிழகத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர், காலை உணவை தவிர்ப்பதாகவும், சரிவிகித உணவு முறையை பின்பற்றாத அவர்களின் பெற்றோருக்கு ஊட்டச்சத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவின் பேரில், சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், பல கட்டங்களாக நடக்கின்றன. வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வகுப்புகளில், கோவையில் இருந்து 12 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
சித்த மருத்துவம் முதல் உளவியல் நிபுணர்கள் வரை, துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து, சரிவிகித உணவு முறை, தன் சுத்தம் குறித்து, பல்வேறு தகவல்களை விளக்கி வருகின்றனர்.
0 comments:
Post a Comment