சென்னை, பழைய ஓய்வூதிய திட்டத்தைசெயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, 2016 பிப்., 26ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் நியமிக்கப்பட்டார்.சில மாதங்களில், அவர் பதவியை ராஜினாமா செய்தார். 2017ல், புதிய தலைவராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். வல்லுனர் குழு, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, கருத்து கேட்டது. அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கைவிட வேண்டும்' என, வலியுறுத்தி வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கையை, குழுத் தலைவர் ஸ்ரீதர் நேற்று, முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்.
ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்
Related Posts:
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம். 06/04/2016 தமிழகம் முழுவ… Read More
தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை 06/04/2016 கடந்த, ஐந்து ஆண்&… Read More
Annamalai University Distance Education Examinations Scribe Request/Permission form 06/04/2016… Read More
10th Maths Answer Key Download 05/04/2016 Tamil Medium Key 10th Maths Answer Key | Mr.M.Gangai Amaran - Click Here & Download Tamil Medium Key English Medium Key 10th Maths An… Read More
SSLC English Paper2 - கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை 06/04/2016 … Read More
0 comments:
Post a Comment