பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

வாட்ஸ் அப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக

வந்தபுகாரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, காவலர்கள்  செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், காவலர்கள் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பணி நிமித்தமாக மட்டும் செல்போனை பயன்படுத்தலாம் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment