மருத்துவத்தைத் தொடர்ந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ‘கேட்’ தேர்வு: ஏஐசிடிஇ திடீர் முடிவு

பொறியியல் படிக்கும் மாணவர்கள்

ஆண்டு இறுதியில் 
திறன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய விதியை கொண்டுவர  அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது. இதனால் ெபாறியியல் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

*நாட்டில் தற்போது 3 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 500 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு நாடு முழுவதும் 7 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்து முடித்து வெளியில் வருகின்றனர்.

*ஆனால் அவர்களில் எத்தனை சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் வேலை வாய்ப்பு இன்றி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

*இதையடுத்து, 2019-2020ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்பு உள்ளிட்ட  அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தொழில் நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவியர் அனைவரும் ‘கேட்’ என்கிற திறன் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பிறகே பொறியியல் படிப்புக்கான சான்று பெற முடியும் என்ற புதிய விதியை கொண்டு வருவது குறித்து அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம்  முடிவு செய்துள்ளது.

 *சமீபத்தில் டெல்லியில் நடந்த அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் நிலவும் வேலை வாய்ப்பின்மையை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவிக்கிறது.

 *அதனால் பொறியியல் மாணவர்கள் மேற்கண்ட திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களுக்கு பொறியியல் சான்று வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறாதவர்கள் திரும்பவும் திறன் தேர்வு எழுதலாம்.

*இது தொடர்பான தகவல்கள் விஸ்வேஸ்ரய்யா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்துக்கு வந்துள்ளது, ஆனால் உத்தரவோ, சுற்றறிக்கையோ வரவில்லை என்று அதன் பதிவாளர் பேராசிரியர் ஜெகநாத் ரெட்டி தெரவித்துள்ளார்.

 *ஏஐசிடிஇ கொண்டு வர உள்ள இந்த புதிய விதியை பல பல்கலைக் கழக பேராசிரியர்கள் வரவேற்றுள்ள நிலையில் பெரும்பாலான பேராசிரியர்கள் எதிர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 *இந்த முடிவால் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டதால், நாட்டில் காளான்கள் போல நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பல லட்சம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டன.

 *அதேபோல பொறியியல் படிப்புக்கும் கேட் தேர்வு வைத்தால் பயிற்சி மையங்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கும், மாணவர்களுக்கு அதனால் பயன் இல்லை என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts:

0 comments:

Post a Comment