அஞ்சல்துறை சார்பில் முகவர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பதிவு தபால், விரைவு தபால், மணி ஆர்டர் அனுப்புதல், தபால் தலை விற்பனை, மின்சார கட்டணம் பெறுதல் உள்ளிட்ட சேவைகளை ெசய்திட முகவர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவையான கம்ப்யூட்டர் வசதிகளை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்
0 comments:
Post a Comment