கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "
பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம்.
இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார்.
இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment