சென்னை, சவுதி அரேபியாவில் பணியாற்ற,இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்து உள்ளது.தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமும், மத்திய வெளியுறவு துறையும் இணைந்து, வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளன.இந்திய தொலைத் தொடர்பு துறையின், சவுதி அரேபியா திட்ட பணிகளுக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமா மற்றும் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் உள்ளன. மாதம், 67 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். ஜி.ஐ.எஸ்., இன்ஜினியரிங் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ளவர்கள், omcresum@gmail.com என்ற, இ - மெயிலுக்கு, கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் விபரங்களை, புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.மேலும், www.omcmanpower.com என்ற இணையதளத்தில் கூடுதல் விபரங்களை அறியலாம். இந்த தகவலை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment