எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்!
10/03/2016

இந்த தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படஉள்ளதால் விரைந்து விண்ணப்பித்து வெற்றிக்காண பயணத்துக்கு தயாராகுங்கள். விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப் பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகளில் நடைபெறுகிறது.முதல் நிலை தேர்வு: பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அமைந்திருக்கும்.இரண்டாம் நிலை தேர்வு: கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் அமைந்திருக்கும்.
நேர்முகத் தேர்வு: குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் மத்திய அரசு பணி உறுதி.
தகுதி: ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வெழுத ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பணிகளுக்கு ஏற்ப வயதுவரம்பில் மாற்றம் காணப்படும். அதிகபட்சம் 27, 30, 32க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணி: பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: மே மாதம் 8 - 22 -ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://sscregistration.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 10.03.2016மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்றஇணையதளத்தை பார்க்கவும்.
0 comments:
Post a Comment