பிளஸ் 2 மாணவர்கள் பெல்ட் அணியதடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

பிளஸ் 2 மாணவர்கள் பெல்ட் அணியதடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

10/03/2016

         பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெல்ட், காலணியுடன் செல்வதை தடுக்குமாறு‌ உத்தரவு ‌எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,



ப்ளஸ் டூ தேர்வெழுதும் மாணவர்களை, பெல்ட் மற்றும் காலணி அணிந்து தேர்வறைக்குள் செல்லக்கூடாது என கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெல்ட் மற்றும் காலணி அணிந்து தேர்வறைக்குள் செல்லக்கூடாது என உத்தரவு எதையும் பிறப்பிக்க‌ில்லை என தெரிவித்துள்ளது.இதனை கேட்ட நீதிபதிகள்‌, வழக்கை தொடர்ந்த மனுதாரர் தனது கோரிக்கைக்கு ஆதரவான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Posts:

0 comments:

Post a Comment