பாட புத்தகம், நோட்டுகள் தேவை; அரசிடம் பட்டியல் சமர்பிப்பு

பாட புத்தகம், நோட்டுகள் தேவை; அரசிடம் பட்டியல் சமர்பிப்பு

10/03/2016

     வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தேவை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
      பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை இலவசமாக கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. இதேபோல் வரும் கல்வி ஆண்டிலும் பாட புத்தகங்கள், நோட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் பள்ளி கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேவை பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது
ஆறாம் வகுப்பில், 15 ஆயிரத்து, 300, ஏழாம் வகுப்பில் 13 ஆயிரத்து, 500, எட்டாம் வகுப்பில், 14, ஆயிரத்து300, ஒன்பதாம் வகுப்பில், 22 ஆயிரத்து, 950, எஸ்.எஸ்.எல்.சி.,யில், 23 ஆயிரத்து, 200, பிளஸ் 1ல் 20ஆயிரத்து 400, பிளஸ் 2வில், 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிப்பர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இரு தொகுதியாக (தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியாகவும், பிற பாடங்கள் மற்றொரு தொகுதியாகவும்) புத்தகங்கள் முதல் பருவத்துக்கு வழங்கப்படும். 
ஒன்பதாம் வகுப்புக்கு மூன்று தொகுதியாக ( தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதி, கணிதம் ஒரு தொகுதி,அறிவியல், சமூக அறிவியல் மற்றொரு தொகுதி) புத்தகங்கள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரே ஒரு முறை புத்தகம் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் குறித்த தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Posts:

0 comments:

Post a Comment