கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகளில்
2016 இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்,
குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 18)
நடைபெறுகிறது.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில்
சென்னை "மோபியஸ் நாலெட்ஜ் சர்வீஸ்' என்ற நிறுவனம் பங்கேற்று, மாணவர்களை
தேர்வு செய்கிறது. இதில், சி.எஸ்.இ. ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ. மற்றும் கலை
அறிவியல் துறையான பி.காம்., பி.சி.ஏ., பி.எஸ்சி., மாணவர்கள்
கலந்துகொள்ளலாம்.
கல்லூரி சான்றிதழ், இரண்டு புகைப்படங்கள், கல்விச்
சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களுடன் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அன்றைய தினம் காலை 9 மணிக்குள்
பெயர் பதிவு செய்யலாம் என அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment