அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பதட்டத்தோடும் பயத்தோடும் குறிவைத்தால் இலக்கு தவறிவிடும். எனவே தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

11/03/2016
மாணவ மணிகளே தேர்வு வந்துவிட்டதா? தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
தேர்வு நெருங்கி விட்டதே என்று, தெரிந்தே தீயை மிதிக்கப் போகிற
உணர்வோடும், பாம்பை அணுகப் போகிற பயமோடும் தேர்வை அணுகத் தேவையில்லை.
நன்கு படித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் நடுக்கம்
உங்கள் அணுகாது. தன்னம்பிக்கை இல்லாத உள்ளத்தில் பயம் பாய் போட்டுப்
படுத்துக்கொள்ளும்.
இனி செய்ய வேண்டியது
இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. இந்த வினாடியிலிருந்து நீங்கள்
முயற்சித்தால் கூட வெற்றி பெறலாம். படிப்பதை படம் பார்ப்பதைப் போல ஒரு
சுவையான அனுபவமாக எடுத்துக்கொண்டால் படித்ததெல்லாம் மனிதல் பதியும்.
விருப்பத்தோடு படித்தால் விறுவிறுவென பாடம் புரியும். புத்தகங்களுடன்
போராட்டம் நடத்தாமல் விரும்பிப் படிக்கும்போது, ஆவலுடன் கேட்கும்போது
இதயத்தில் ஆழமாகப் பதியம் போடப்படுகிறது.
ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அப்படியே தொடக்கம் முதல் முடிவுவரை திரும்ப
நினைவில் கொண்டுவர முடிகிறதே எப்படி? வசனம், பாடல் காட்சிகள் அனைத்தும்
நெஞ்சில் நிறைந்து விடுகின்றன. காரணம், முழு கவனமும் படம் பார்ப்பதில்
இருந்ததுதான்.
உங்களாலும் முடியும்
இருக்கிற குறுகிய காலத்தை கவனமாகக் கையாண்டால் கூடப் போதும். வெற்றி
நிச்சயம். முடியும் உம்மால் முடியும். உனக்குள் இருக்கிற பேராற்றலைக்
குறைத்து மதிப்பிட வேண்டாம். நான் கால்நடை மருத்துவக் கல்லூரியில்
பேராசிரியராகப் பணியாற்றினாலும் ஆர்வத்தின் காரணமாக அஞ்சல் வழியில் எம்.ஏ…
தமிழ் இலக்கியம் படித்தேன். மே மாதம் தேர்வு. மார்ச் மாதக் கடைசியில் தான்
பாடங்கள் வந்து சேர்ந்தன.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களைப் பாடமாக வைத்திருந்தார்கள். ஒரு
கல்லூரிப் பேராசிரியரைச் சந்தித்து தொல்காப்பியம், நன்னூல் பாடம்
சொல்லித்தருமாறு வேண்டினேன்.
“தேர்வுக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்கிறார். 35 நாட்கள்
என்றேன். முப்பத்தைந்து நாட்களில் படிக்க முடியாது. இந்த வருடம் விட்டு
விடுங்கள் அதற்குள்படிக்க முடியாது. அடுத்த தேர்வு எழுதுங்கள்” என்று
சொன்னார். அது எனது ஆற்றலை குறைத்து மிதிப்படுவதாக உணர்ந்தேன். அவர்
பேசியது என்னை வேகப்படுத்தியது.
வீடு திரும்பிய நான் வைராக்கியத்தோடு படிக்க அமர்ந்தேன். தினம் 6 மணி நேரம்
படித்தேன். படித்துப் படித்து – சுருக்கி எழுதி வைத்தேன். ஒரு பக்கம்
படித்தால் அதை ஓரிரு – வரியில் எழுதி வைத்தேன். 25 நாட்களில் 5
தாள்களுக்கும் உரிய பாடங்களைப் படித்து முடித்து குறிப்பெடுத்தேன்.
தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே இருந்தன. அதற்குள் ஒரு முறை, பிறகு
தேர்வுக்கு முந்திய நாள் ஒரு முறை திருப்பிப் பார்த்தேன். முதல வகுப்பில்
தேர்ச்சி பெற முடிந்தது.
உங்களாலும் முடியும் இப்போது உங்களுக்குத் தேவை உங்கள் கற்றலில் உங்களுக்கு
நம்பிக்கை. இப்போதே தீர்மானத்துடன் படிக்க முடியும் என்று முடிவெடுங்கள்.
மிஞ்சியுள்ள நாட்களே போதும்.
தேர்வுக்கு தயாரிப்பு
தேர்வுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிப் படிப்பது, எந்த நாளில் எந்தப்
பாடத்தைப் படிப்பது என்பவைற்றை எல்லால் நாள்வாரியாக காகுபடுத்தி ஓர்
அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும்.
நேரத்தை திறம்படச் செலவழிக்கும் வகையில், தேர்வுக்காகப் படிக்கும்
சமயங்களில் அங்கும் இங்கும் செல்வதையும், நேரத்தை பலியிடும்
வெட்டிப்பேச்சுகளையும் கட்டுப்படுத்துங்கள். சலிப்பு தோன்றுமானால் சிறிது
நேரம் வெளியில் நடந்து வரலாம்.
புத்தகம் முழுவதையும் படிப்பதற்கு போதிய நேரமில்லை என நினைத்தால் உடனே
செய்ய வேண்டியது இதுதான். கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குரிய பழைய
வினாத்தாள்களை எடுத்துக் கொண்டு அதில் உள்ள வினாக்களுக்கு தேர்வில்
விடையெழுதுவதற்கு ஏற்ப தயாரித்துக் கொண்டால் அதுவே வெற்றிக்குப்
பெருந்துணைபுரியும்.
ஆனால், சாதனைகளைப்புரிய நினைக்கிறவர்கள் அனைத்துப் பாடங்களயும்
படிக்கவேண்டும். தேரவுக்குப் படிக்கும்போது ஏறெதிலும் மனம் செலுத்தாமல்,
படிப்பதில் செலுத்தவேண்டும். எந்தப் பாடம் படித்தாலும், படிக்கிறபோது
அந்தப் பாடமாகவே மாறி விட வேண்டும்.
படிக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாமல் பழக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து
படித்தால் மனம் சிதறாமல் விரைவில் குவியும். ஒவ்வொரு முறையும் படிக்கத்
தொடங்கும் முன் மனத்தைச் சம நிலையில் கொண்டு வரும் பயிறிச்சியை கண்களை
மூடிக்கொண்டு ஓரிரு மணித்துளி செய்துவிட்டு (இப்பயிற்சி முன்பே
தன்னம்பிக்கை இதழில் நினைவாற்றல் மேம்பட வழி என்ற எமது கட்டுரையில்
வெளிவந்துள்ளது. அதையும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தற்போது
தன்னம்பிக்கையில் வெளியிட்டுள்ள “நினைவாற்றல் மேம்பட வழிகள்” என்ற
புத்தகத்தைப் படித்துப் பயன்பெறலாம்)
மனதைச் சமநிலைக்குக் கொண்டு வந்த பிறகு படித்தால் சாதாரணமாக 1 மணி
நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதை 15 மணித்துளிகளில் படித்துவிடலாம்.
கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கம் உரைகளை (Notes) வாங்கிப் படித்தே பலரும்
தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுக்குத் தயாரிக்கும்போதே அந்த உரைகளை,
வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு சொந்த நடையில் குறிப்புகளை எழுதி
வைத்துக்கொண்டால் – கூடுதலான சில விபரங்களயும் சேர்த்து எழுதிவைத்துக்
கொண்டால் மற்றவர்களில் இருந்து நமது விடை வேறுபட்டு இருக்கும்.
மேலும் எழுதும் விடைக்கு ஏற்ப படங்கள், புள்ளி விபரங்களையும் சேர்ந்து
எழுதினால் மிகுந்த மதிப்பெண் பெறமுடியும். காரணம் கடைகளில் கடைக்கும்
வழிகாட்டிகளை, உரைகளை வாங்கிப் படித்து எழுதுபவர்களின் விடை பெரும்பாலும்
ஒரே மாதிரியாக இருக்கும். இது மதிப்பிடுபவருக்கு எரிச்சலூட்டும்.
ஓய்வும் – உணவும் – உடற்பயிற்சியும்
எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் உடல் நலம் கெடும். சுவர்
இருந்தால்தானே சித்திரம் வரைய. எனவே, தேர்வு சமயத்தில் உடல் நலத்தையும்
கெடுத்துக்கொண்டால் முதலுக்கே மோசமாகிவிடும். உடலுக்கும் மூளைக்கும் நிறைய
வேலை கொடுப்பதால் அதிக சக்தி செலவாகும்.
படிப்பில் ஆர்வமாக இருக்கையில் வயிறு புடைக்க உண்ண விருப்பம் இருக்காது.
அதிகம் உண்டாலும் உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள
உணவாகவும் உண்ண வேண்டும். சான்றாக கடலை மிட்டாய் தின்று நிரம்பத் தண்ணீர்
குடிக்கலாம்.
இரவில் படிப்புக்கு இடையில் சோர்வு நீங்க கோப்பை கோப்பையாகக் காப்பியும்
தேநீரும் அருந்துவது நல்லதல்ல. பழச்சாறு, தேன் கலந்த நீர் அருந்தலாம்.
கண்களுக்கும், உடலுக்கும் ஓய்வு தருவது அவசியம். தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒருநிமிடம் கண்களை மூடி
கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம்.
மேலும், உள்ளங்கையிலோ அல்லது கண்கிண்ணத்திலே (Eye cups) (இயற்கை
மருத்துவமனைகளில் மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தண்ணீரை
எடுத்துக் கொண்டு விழிகளை அதில் நனைத்து சுழல விட்டுக் கழுவலாம். இதனால்
கண் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி பெறும். மேலும், கண் எரிச்சசல்
இருப்பின் கால் பாதங்களைக் குளிர்ந்த நீர்ல் நனைக்க வேண்டும்.
தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்காமல் பாடத்தின் ஒரு பகுதியை படித்து
முடித்துவிட்டால் (ஓரிருமணி நேரம் படித்தவுடன்) 10 நிமிடம் உடலைத் தளர்த்தி
கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு படித்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இது படித்ததை மீண்டும் நினைவில் கொண்டு ஆழமாக மனதில் பதியவைக்கவும் உதவும்.
உடல் ஓய்வு பெற்று புதிய தெம்புடன் மீண்டும் படிக்கவும் முடியும்.
கூடிப்படித்தலும் எழுதிப்பார்த்தலும்
படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது அல்லது தனியாகப்
படிப்பதைவிட, கூடிப்படிக்கும் போது ஒருவர் படித்ததை மற்றவர்களிடம் சொல்லிப்
பார்ப்பதால், விவாதிப்பதால் படித்தவர் படித்ததை நினைவில் கொண்டு வரவும்,
அதைக்கேட்பவர் மனதில் பதிய வைத்துக்கொள்ளவும் முடியும். ஏனென்றால்
படிப்பதைவிட படித்ததை காதில் கேட்பதால், பாடம் மிக எளிதில் மனதில்
ஆழப்பதியும். ஒருவருக்கு விளங்காததை மற்றவரிடம் கேட்டுத்தெளிவு பெறலாம்.
பாடங்களைப் படித்து முடித்தவுடன் நேரம் ஒதுக்கி முந்தைய ஆண்டு வினாத்தாளை
வைத்து தேர்வு எழுதிப் பார்க்கவேண்டும்.அப்போதுதான் நாம் எந்த அளவிற்குப்
படித்திருக்கிறோம் என்பதும், உரிய நேரத்திற்குள் விரைவாக விடைகள்
அனைத்தையும் முழுமையாக விரைவாக எழுத முடிகிறதா என்பதும், படித்ததைச்
சரியாகவும் தெளிவாகவும் எழுதுகிறோமா என்பதும், சரியாக எழுத
முடியவில்லையானால் எந்தப் பாடங்கள் மறந்து போகின்றன என்பதும் விளங்கும்.
தேர்வு எழுதுவதில் உங்களுக்கு இருக்கிற குறைபாட்டை நீங்களே தற்சோதனை மூலம் நெறிப்படுத்தி மெருகேற்றிக் கொள்ள இதுதான் வழி.
தேர்வு பயம்
அரையும் குறையுமாகப் படித்திருந்தா பயம் ஏற்படும். அய்யோ படித்தது வருமோ
வராதோ? வினாக்கள் கடினமாக இருக்குமோ? அல்லத எளிதாய் இருக்குமோ? என்றெல்லாம்
உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி பயத்தை ஏற்படுத்தும்
நன்கு படித்திருந்தால் நாம் நன்கு படித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை
பிறக்கும். எதைக் கேட்டாலும் நம்மாலும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை
உங்கள் உள்ளத்தில் இருந்தால் பயம் உங்களை நெருங்காது.
வதந்திகளை நம்பாதீர்
கேள்வித்தாள் அவுட்டாகிவிட்டது என்ற வதந்திகளை தேர்வு நேரங்களில் சாதாரணமாக
பரபிவிடுகிறார்கள். இதை தயு செய்து நம்பாதீர்கள். இத்தகு நம்பிக்கைகள்
உங்கள் ஆர்வத்தைச் சிதைத்து சீரழித்துவிடும். அதேபோல தேர்வு நிகழும்
இடத்திற்குச் சென்றால் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதை (தேர்வு அன்று)
தவிர்த்துவிடவும். ஏனென்றால் சிலர் அந்தக் கேள்வி வருது, இந்தக் கேள்வி
வருது என்று உங்களைக்குழப்பிவிடுவார்கள். வருடம் முழுதும் படிக்காததை
அந்தக் கடைசி அரைமணி நேரத்தில் படித்து ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
ஒரு மணி நேரம் முன்னதாக
தேர்வு நடக்கும் இடத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிட
வேண்டும். சரியாக மணியடிக்கும் போது சென்றடைவீர்களேயானால் உங்களுடைய இடம்
எந்த அறையில் எந்த வரிசையில் இருக்கிறது என்று தெரியாமல் அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டிருந்தால் ஒரு வழியாக உங்கள் இடத்தத்தேடிப் பிடிப்பதற்குள்
மற்றவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டால் பதற்றம் ஏற்படும். அதனால் மனம்
சமநிலை இழந்து படித்ததைக்கூட மறந்துவிட நேரிடும்.
தேர்வுக்கூடம் நடந்து செல்லும் தொலைவில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக சிரம்ம்
இருக்காது. ஆனால் தொலைவில் இருந்து வருகிறவர்கள் பேருந்து மோட்டார் வண்டி
அல்லது மிதி வண்டியை நம்பி வரவேண்டி இருந்தால் திட்டமிட்டுச் செயல்பட
வேண்டும். பேருந்து வராமல் போகலாம். வண்டி வழியில் பழுது ஆகலாம். எனவே,
எந்த நிலையிலும் உரிய நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே தேர்வு நிகழும்
இடத்தைச் சென்றடைய வேண்டும்.
தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் சென்றிருப்பினும் சிருக்கு ஒரு தவிப்பு
இருந்து கொண்டே இருக்கும். மனம் சமநிலையில் இருக்காது. இது பொதுவாக
எல்லோருக்கும் இருக்கக்கூடியதுதான்.
எனவே, தேர்வு அறையில் சென்று அமர்ந்தவுடன் ஒரு மணித்துளி நேரம் கண்களைமூடி மனத்தைச் சமநிலைக்கு கொண்டுவரும் பயிற்சியைச் செய்யுங்கள்.
முதலில் வசதியாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். நன்கு மூச்சுக்
காற்றை உள்ளே இழுக்கவும். மூச்சுக்காற்றை உள்ளே இழக்கும்போது ஏற்படும்
ஒலியை உங்கள் செவிகளால் உணருங்கள். பிறகு உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வாய்
வழியாக (மூக்கு வழியாக அன்று) மெல்ல வெளிவிடுங்கள்.
அப்படி வெளிவிடும்போது மனதுக்குள் Relax,Relax,Relax,என்று சொல்லுங்கள்.
இவ்வாறு ஓரிரு நிமிடம் செய்தால் போதும். இந்தப் பயிற்சியால் உங்கள் தவிப்பு
குறைந்து போயிருக்கும். மனம் சம நிலையில் இருந்தால் படித்தது மடமடவென
நினைவுக்கு வரும்.
தேன்நீர்
தேர்வு நாட்களில் உடல் நலம் குன்றினாலும் தவிர்க்க முடியாமல் தேர்வு எழுத
வேண்டிய நிலை வரும். குறிப்பாகப் பெண்களுக்கு இயற்கையில் நிகழும் உடல்
நலக்குறைவு தேர்வு சமயத்தில் ஏற்பட்டால் உடல் சக்தியற்றுத் தேர்வு நன்கு
எழுத முடியாத நிலை ஏற்படும்.
இத்தகு நிலைகளை ஓரளவு சமாளிக்க, தேர்வுக்குச்செல்லும்போது ஒரு தண்ணீர்
பாட்டிலில் தேன் கலந்த நீர் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு எழுதிக்
கொண்டிருக்கும்போது களைப்பு தோன்றினால் தேன்நீர் சிறிது அருந்தினால் போதும்
உடனே அடத்த வினாடியே புத்துணர்ச்சியும் சக்தியும் பெறலாம்.
பத்து மணிக்குத் தேர்வு என்றால் 9.45 மணிக்குச்சென்று உங்கள்
இருப்பிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். பத்து மணிக்குத்தான் வினாத்தாள்
தருவார்கள். ஆனால் விடைத்தாள் (Answer book) முன்னதாக தந்து விடுவார்கள்.
அதை வாங்கியவுடன் அதில் உரிய அளவு தாள்கள் இருக்கின்றனவா? அவை சரியாக பின்
அடித்து இணைக்கப்பட்டுள்ளனவா? எனப் பரிசோதித்து குறைபாடு இருந்தால் வேறு
விடைத்தாள் வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் தேர்வு என், பக்க எண்
ஆகியவற்றை எழுதி தாளின் இடது பக்கத்தில் மார்ஜின் கோடு போடாமல் இருந்தால்
கோடு போடுங்கள்.
பத்து மணிக்குச்சரியாக தேர்வு அறைக்குப் போனால் தேர்வு எண், பக்க எண்
எழுதுவது போன்றவற்றுக்கே 5 நிமிடம் ஆகிவிடும். பேனா,பென்சில், அழிப்பான்,
கலர் பென்சில்,ஸ்கேல் மற்ற தேவையான பொருள் அனைத்துயைமு மறவாமல்
எடுத்துச்செல்க. தேர்வு அறையில் யாரிடமும் இரவல் கேட்காதீர்கள்.
தேர்வு எழுதுவது எப்படி?
சிலர் வினாத்தாள் வாங்கிவுடன் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதும்
எழுதி முடித்தவுடன் மறுபடியும் வாசித்தால் கேள்விக்கும் பதிலுக்கும்
சம்பந்தமே இருக்காது. வினாவை அரை குறையாக வாசிப்பதால் இப்படி நிகழ்கிறது.
வினாத்தாள் வாங்கியதும் முதலில் முழுவதும் படித்து முடியுங்கள். சில சமயம்
தமிழ் வினாத்தாள்களில் சில கலைச்சொற்களை ஆங்கிலத்தில் உள்ளதை ஒலி பெயர்த்து
(Transliterate) எழுதியிருப்பார்கள். அவற்றை ஊன்றிப் படித்துத் தெளிந்து
விடை எழுத வேண்டும். பாடங்களைப் படிக்கும்போதே கலைச்சொற்களுக்கு
அடைப்புக்குள் கொடுக்கப்படுள்ள ஆங்கில சொற்களையும் படித்து நினைவில்
வைத்துக்கொண்டால் கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
எந்தெந்த வினாக்களுக்கு உங்களுக்குநன்கு விடை தெரியுமோ
அவைற்றத்தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வினாவுக்கும் நேரத்தைத்திட்டமிட்டு ஒதுக்கி
அதற்குள் எழுதி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
முதலில் மிக நன்றாக விடை தெரிந்த வினாவுக்கு விடை எழுதுங்கள். முதல்
பக்கத்திலேயே நன்றாக எழுதி இருப்பதைப் பார்த்தால் வினாத்தாள்
திருத்துபவருக்கு மனம் மலரும். மதிப்பெண் அள்ளிப்போட மனம் வரும்.
அடித்தலும், திருத்தலும் தப்பும்தவறுமாய் முதல் பக்கத்திலேயே இருந்தால்
எரிச்சல் வரும். மதிப்பெண் குறையும்.
நன்றாக விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்று பகுதி
-அ (Part-A) வில் ஒரு வினாவுக்கும் அடுத்து பகுதி -இ இல் ஒரு வினாவுக்கும்
விடை எழுதுவது சரியல்ல. இது விடை திருத்துவோர்க்கு எரிச்சலூட்டும்.
மதிப்பெண் குறையும்.
பகுதி-அ என்று எடுத்துக் கொண்டால் அதில் நன்கு விடை தெரிந்த வினாக்களுக்கு
முதில் விடை எழுதிவிட்டு பிறகு அடுத்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டும. இதுவே
சரியான முறையாகும்.
கையெழுத்து அழகாக இருந்தால் நல்லது. இல்லையெனில் எழுத்து தெளிவாக
இருந்தால்கூட போதும். அழகாக இருக்கவேண்டும் என்பதற்காகவும்
படித்ததையெல்லாம் எழுதவேண்டும் என்பதற்காகவம் நன்கு தெரிந்த ஒரு சில
கேள்இகளுக்கு விடை அளிப்பதிலேயே நேரம் முழுவதும் செலவிட்டு விட்டு கடைசில்
நேரமின்றி மற்ற கேள்விகளுக்கு அரையும், குறையுமாக விடை எழுதுவது சாதனை
படைக்க பயன்படாது.
சில சமயம் சில வினாக்களுக்கு விடை எழுத முடியாமல் கூடப்போய்விடும். எனவே
படித்ததையெல்லாம் எழுதுவதல்ல தேர்வு. எதை எழுத வேண்டுமோ அதை அந்த
அளவுக்குத் தெளிவாகவும், விரைவாகவும் எழுத வேண்டும்.
எக்காரணம் கொண்டும் நேரம் இல்லை என்று சில வினாக்களுக்கு விடை எழுதாமல்
விட்டுவிடக் கூடாது. எனவே, சருக்கமாகவும், விரைவாகவும் எழுதிஎல்லா
வினாவுக்கும் விடை எழுத வேண்டும்.
சிலர் நிறையப் பக்கம் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று
தவறாக எண்ணுவது உண்டு. அத்தகையவர்கள் பக்கத்திற்கு பத்துவரிகள் மட்டும
எழுதி பக்ககளை நிரப்புவது உண்டு. பக்கத்திற்கு இருபது வரிகள் எழுதவேண்டும்.
எத்தனை பக்கங்கள் எழுதினோம் என்பதைவிட என்ன எழுதினோம் என்பது முக்கியம்.
படம்
அறிவியல் பாடத் தேர்வுகளில் (குறிப்பாக விலங்கியல், தாவரவியல், இயற்பியல்)
கேள்விகளுக்கு படம் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் இயலுமானால் படம்
வரைவது சிறந்தது. படம் வரைய அதிக நேரம் செலவிடக்கூடாது. படத்த அழகுபடுத்த
நேரத்தை வீணாக்கக்கூடாது.
படம் விஞ்ஞானபூர்வமாக (Scientific) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மேலும் படம் வண்ணப்படமாக கலர் பென்சில் அல்லது வண்ணத் தூரிகைகள் கொண்டு
(Sketch Pens) வரைய வேண்டும் என்ற கட்டாயமில்லை. எளிமையாக, பென்சில் கொடு
குறைவின்றி முழுமையாக வரைந்தாலே போதும்.
படத்திற்கு தலைப்பு கொடுப்பதும், பாகங்கள் குறிப்பதும் முக்கியம். பாகங்கள்
எல்லாம் சரியாக தெரியவில்லை என்றால் நன்கு தெரிந்ததை மட்டும் குறிகவும்.
தெரியாததை விட்டுவிடவும். மாறாக தவறாக பாகங்களைக் குறித்தால் மதிப்பெண்
குறையும்.
குறுவினாக்கள்
பெரும்பாலும் கிராம்புற மாணவர்கள் ஒரு வரி விடைகள் (Objective type) குறு
வினாக்கள் ஆகியவற்றுக்கும் சரியாக விடை எழுதாமல் மதிப்பெண் இழப்பது உண்டு.
எனவே அவர்கள் பாட்களை ஆழ்ந்து ஊன்றிப் படித்தால் பகுதி-அ வில் கேட்கப்படும்
சரியான விடைகளைத் தேர்வு செய்க. கோடிட்ட இடத்தை நிரப்புக போன்ற
வினாக்களுக்கும் சரியான விடையளித்து அதிக மதிப்பெண் பெறமுடியும்.
கணக்கு
இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கணக்கு வினாக்களுக்கு
விடையளிக்கும்போது பெரும்பாலும் தவறு செய்வது கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல் (Arithmetic) போன்றவற்றை செய்யும்போதுதான்,
கணக்குப்போடும் வழிமுறை தெரிந்து சாதாரணமாகச்செய்யக் கூடிய கூட்டல்
கழித்தலில் கவனமின்று தவறு செய்தால் மதிப்பெண் குறையும்.
அதே போல + – போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தும்போது கவனக்குறைவாக மாற்றிப்
போட்டு விடுவதுண்டு. கணக்கைப் பொருத்தவரை அ – பிரிவில் (Obejctive type)
உள்ள கேள்விகளுக்கு விரைவாக டிக் செய்வதால் அதிகம் தவறு செய்துவிட வாய்ப்பு
உண்டு. சற்று கூர்ந்து கவனித்து விடையளித்தால் கணிதப் பாடங்களில் அதிக
மதிப்பெண் பெறலாம்.
கணித்த்தில் விளக்கம் (Theory) எழுதும்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு
விடையளித்தல் எளிது. பெரும்பாலும் கணகு போடும்போது உரிய வழி முறையில்
(Steps) செய்து விடை தவறாக இருந்தால் சரியாக கடைபிடிகப்பட்டுள்ள
வழிமுறைகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். ஆனால் சில வினாகளுக்கு முடிவு
விடை சரியாக இருந்தால்தான் மதிப்பெண் கிடைக்கும். எனவே வினாவை நன்றாக
படித்து அதற்கு ஏற்ப விடையளிக்க வேண்டும்.
இன்னும் சில சமயத்தில் கணக்கைப் போட்டு விடையை எழுதி வந்து விடுவர். ஆனால்
வினாவின் இறுதியில் இதிலிருந்து நீ அறிந்து கொள்வது என்ன? என்ற பகுதிக்கு
விடை எழுதாமல் விட்டுவிடுவர். இதனால் முழுமதிப்பெண் பெற முடியாமல்
போய்விடும்.
சூத்திரங்கள்
கடைசி நிமிடம் வரை எழுதிக் கொண்டிருக்காமல் 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே
எழுதி முடித்துவிட்டு வினா எண்கள் மற்றும் பக்க எண்களைச்சரிபார்த்து
அடுக்கி நூல் போட்டு, முடிபோட்டு, அடிக்கோடு இடுதல், விடை முடிந்ததும்
கோடிடுதல், சில இடங்களில் தவறு நேர்ந்திருந்தால் கவனமாக அதைச் சரிசெய்தல்
ஆகியவற்றைச் செய்யவேண்டும்.
நேராக வீட்டிற்கு
அன்றை தேர்வு எழுதி முடித்து அறையை விட்டு வெளிவே வந்ததம் நேராக வீட்டிற்கு
செல்லவேண்டும். அதை விடுத்து மற மாணவர்களிடம் பேசினால் நீ எழுதிய அந்த
விடை தப்பு இந்த விடை தப்பு என்று உங்களை உணர்வு குன்றச்
செய்துவிடுவார்கள். அவ்வாறு மனம் சோர்ந்திட நேர்ந்தால் அது அடுத்தநாள்
தேர்வுக்குப் படிப்பதைப் பாதிக்கும்.
எழுதி முடித்தது சரியாயினும் தவறாயினும் அதை பற்றி இப்போது விவாதம் செய்யாமல் அடுத்த தேர்வுக்கு தயாராவதே சாலச் சிறந்தது.
முடியும்
கருத்துக்களைப் படிப்பதும், படித்ததை மனதில் பதிய வைப்பதும் பதிந்ததை
அடிக்ககடி நினைத்துப் பார்ப்பதும் நினைவில் இருப்பதை கேள்விக்கு ஏற்ப உரிய
விடையாக படம், புள்ளி விபரங்களை முழுமையாக எழுதுவதும், அழகாக – தெளிவாக
எழுதுவதும் தேர்வு எண், பக்க எண் முறையாக குறித்துள்ளதா என சரி செய்து
அடிக்கோடிட்டு முடிபோட்டுக்கொடுப்பது வரை எல்லாம் சரியாகச் செய்தால் தான்
வெற்றி பெற முடியும்.
முடியும் உம்மால் முடியும்
முயன்று படித்தால் முடியும்
நொடியும் சிற்சில நொடியும்
நொடிந்து சோர்ந்திடாமல்
கடினமாக உழைத்தால்
வெற்றி கையில் வந்து படியும்.

0 comments:
Post a Comment