தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டில் கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தமிழக அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டிய சுமார் 2,500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மாதங்களுக்குள் இந்த காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அதன்பின்னர், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் முடித்து, இந்த காலி பணியிடங்களை எல்லாம் நிரப்பவேண்டும். இந்த வழக்கை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறி உள்ளனர்.
0 comments:
Post a Comment