அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம்

தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ7500 ஊதியத்துடன் நியமிக்கவும்  தெரிவிததுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும்.அதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
இதன்படி சென்னை மாவட்டத்தில்  14, திருவள்ளூர் மாவட்டத்தில்  106, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

0 comments:

Post a Comment