சி.பி.எஸ்.இ. பாடத்தில் நாடார் சமுதாயம் பற்றி தவறான தகவல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்

ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்களை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. சார்பில் கண்டிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகளை முழுமையாக நீக்க உத்தரவிட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி, மாணவ, மாணவிகளின் கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கல்வி நிலையங்கள், பாடத்திட்டம், கற்றல் - கற்பித்தல் முறைகள், ஆசிரியர்கள், அதிகாரிகள் என அனைத்திலும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment