பள்ளி கல்வித்துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வியின் பணியாளர் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மான, சமக்ரா சிக் ஷாவின் கூடுதல் திட்ட இயக்குனர் - 2 என்ற பதவி வகிப்பார்.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., யில் உறுப்பினராக பணியாற்றும் இணை இயக்குனர் உஷாராணி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், அதே பதவியில் நீடிப்பார். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment