Flash News : ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள், 
இடமாறுதலுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இடமாறுதல் கவுன்சிலிங், இன்று நடக்க உள்ளது. 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இன்று கவுன்சிலிங் நடக்கிறது.பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள், மாவட்டத் திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறவும், நாளை கவுன்சிலிங் நடக்கும். இந்த பொது மாறுதல் கவுன்சிலிங், அந்தந்த மாவட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும். ஆன்லைனில் மாறுதல் கோரி பதிவு செய்தோர் மட்டும், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

Related Posts:

0 comments:

Post a Comment