அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 நபர்களைப் பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாக ஐகியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஐகியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் விற்பனை மையத்தை ஆகஸ்ட் மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. அடுத்து நவி மும்பையில் தனது இரண்டாவது விற்பனை மையத்தை துவங்கவுள்ளது.
இதுபற்றி ஐகியா இந்தியா நிறுவனத்தின் மக்கள் மற்றும் கலாச்சார பிரிவு மேலாளரான அன்னா கேரின் மன்ஸன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அடுத்த ஆண்டில் நவி மும்பையில் எங்களது விற்பனை மையத்தை துவங்கவுள்ளோம். அதற்காக நேரடியாக 5,000 நபர்களை பணியமர்த்தவுள்ளோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மறைமுகமாகவும் 5,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து ஊழியர்களுக்கும் சமமான, பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தித் தர நாங்கள் விரும்புகிறோம். ஐகியாவின் கொள்கைப்படி அனைத்து நிலைகளிலும் 50 விழுக்காடு வேலைவாய்ப்புகள் பெண்களுக்கே வழங்கப்படும். லெஸ்பியன், கேய், திருநங்கைகள் போன்றோரையும் பணியமர்த்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment