கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வித்துறை சார்பில் ரூ.15 லட்சம் நிவாரணப் பொருள்கள்


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் செயல்படும் 1050 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் இருந்து அரிசி, கோதுமை மாவு, எண்ணை வகைகள், மருந்துபொருட்கள், குடிநீர் பாட்டில்கள் என மொத்தம் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டன. கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.தங்கவேல்  நிவாரணப் பொருள்களை  மூன்று லாரிகளில் அனுப்பி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கனகராஜ்(கரூர்), கபீர்(குளித்தலை) மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்

Related Posts:

0 comments:

Post a Comment