பெருங்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்சார்பில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, டெல்டா மாவட்ட கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெருங்குடியில் உள்ள, புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 300 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.அவர்களின் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.பள்ளி தலைமை ஆசிரியை, அன்னபூரணி கூறியதாவது:எங்கள் பள்ளியில் படிக் கும், மாணவ - மாணவியர், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க முன் வந்தனர். அதன்படி, ஒரு வாரமாக, நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டோம்.இதில், அரிசி, பருப்பு, சோப்பு, பாய், பெட்ஷீட், சமையல் பொருட்கள் உள்ளிட்ட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேகரமாகின. அவற்றை, டெல்டா மாவட்டங்களுக்கு, இரண்டு கட்டமாக பிரித்து அனுப்பினோம். எங்கள் பள்ளி ஆசியர்கள் மூலம், அங்குள்ள கிராம மக்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment