குறைந்த ஒலியுடன் குறைந்த மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசு வெடிக்க வேண்டும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகளை விளக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு முயற்சிக்கலாம் என கூறியுள்ளது. மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது என்றும், மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள், அமைதிகாக்கும் இடத்தில் வெடிக்க வேண்டாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment