புதுச்சேரி:புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், குழந்தைகள் தின விழா அரியாங்குப்பம் ஏ.வி.ஆர்.கே. மகாலில் நேற்று நடந்தது.
விழாவில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி, சிறந்த படைப்பாளி குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். புதுச்சேரி நகர அமைப்பு குழும சேர்மன் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., பள்ளிக் கல்வித் துறை செயலர் அன்பரசு வாழ்த்திப் பேசினர்.விருது பெற்றவர்கள்ஜவகர் பால்பவன் சார்பில் நடந்த படைப்பாற்றல் கலை பிரிவில் அமலோற்பவம் பள்ளி மாணவி சண்முகபிரியா, ஸ்டான்ஸ்போர்டு பள்ளி வாசன், கிருமாம்பாக்கம் அம்பேத்கர் பள்ளி ஆகாஷ், எழுத்து பிரிவில் காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். பள்ளி ஆஷிகா, ஏனாம் ரிஜென்சி பப்ளிக் பள்ளி முகம்மது ஷர்மிளா, திரு.வி.க. பள்ளி தரணிஷ்வர் பரிசு பெற்றனர்.
அறிவியல் பரிவில் ஆதித்யா வித்யாஷ்ரமம் குருகிராம் அஜேயா, பொறையூர் ஆதித்யா பள்ளி மரகதப்பரியா, நடனப்பிரிவில் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் ஹரிஸ்மிதா, அமலோற்பவம் பள்ளி பேபி இமாகுலேட், காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். பள்ளி சினேகா, பொறையூர் ஆதித்யா பள்ளி துர்கா சங்கர், திருவண்டார்கோவில் ஜவகர் சிறுவர் இல்லம் மீனுா, வாய்ப்பாட்டு பிரிவில் மாகி எக்ஸல் பப்ளிக் பள்ளி கிருஷ்னின்டு சு நம்பியார், வயலின் பாகூர் ஜவகர் சிறுவர் இல்ல வருண பிரியா, மிருதங்கம் புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்ல அஜய்ராமன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.வட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களின் நடனம், வாய்ப்பாட்டு, மிருதங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
0 comments:
Post a Comment