ரசாயனர் பதவி தேர்வு, Result - TNPSC அறிவிப்பு

ரசாயனர் பதவிகளுக்கான எழுத்து

தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில், இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், தொல்லியல் ரசாயனர் மற்றும் ரசாயனர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 17, 18ல் நடந்தது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பதிவெண் பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in- என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 26ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

Related Posts:

0 comments:

Post a Comment