300 ஆசிரியர்கள் சம்பளமின்றி தவிப்பு

300 ஆசிரியர்கள் சம்பளமின்றி தவிப்பு

10/03/2016

        மதுரை திருமங்கலம் யூனியனில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு பிப்., மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
 
      தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருமங்கலம் வட்டார செயலாளர் பாஸ்கரசேதுபாண்டியன், மாநில பொறுப்புக் குழு உறுப்பினர் நெல்சன் கூறியதாவது:இந்த யூனியனில் அனைத்து ஆசிரியர்களும் உரிய
நேரத்தில் கடந்த மாதம் வருமான வரிக்கான ஆவணங்கள் தாக்கல் செய்தும், அதற்கான ஆவணங்களை கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததனர். இதனால் 300க்கும் மேற்பட்டோருக்கு இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை. ஆனால் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக ஊழியர்கள் சம்பளம்
பெற்றுள்ளனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Posts:

0 comments:

Post a Comment