புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

10/03/2016

        புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை இணை பேராசி ரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர்பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.இதுகுறித்து முனைவர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


குர்குமினின் புற்றுநோய் எதிர்ப்பு திறனானது ஏற்கெனவே ஆவணப்படுத்தி இருந்தாலும் பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழிப்பதில் அதன் பங்கு தெரியாமலே இருந்து வந்தது. நாம் உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள’குர்குமின்’ சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு காரணியாகும். எங்களுடைய ஆய்வில் டிஎன்ஏவை பழுது நீக்கும் ஜீன்களில் ஏற்படும் திடீர் மரபணு மாற்றங்களில் உண்டாகும் நான்-பாலிபோசிஸ் பெருங்குடல் புற்றுநோய் செல்களை குர்குமின் அழிக்க வல்லது என உறுதி செய்யப்பட்டது.மேலும், முக்கிய புரதத்தின் அளவை தூண்டி பெருங்குடல் புற்றுநோய் செல்களின் இறப்பையும் அதிகப்படுத்துகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

Related Posts:

0 comments:

Post a Comment