சென்னை, பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுக்கு, தனி தேர்வர்கள் மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோருக்கு, செப்., மற்றும் அக்டோபரில் துணை தேர்வு நடத்துவதை ரத்து செய்து, 2018, ஆக., 6ல், தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.ஆனால், தனி தேர்வர்கள், மார்ச், ஏப்ரலில் பொது தேர்விலும், ஜூன், ஜூலையில் சிறப்பு துணை தேர்விலும் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே, 2019, செப்., மற்றும் அக்டோபரில் துணை தேர்வு நடத்தப்படாது. அதற்கு பதில், மார்ச், ஏப்ரல் பொது தேர்விலும், ஜூன், ஜூலையில் நடத்தப்படும் சிறப்பு துணை தேர்விலும், தனி தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment